சவூதி அரேபியாவின் அல்-நஸர் அணியில் இணைந்தார் ரொனால்டோ

0 4701

சவூதி அரேபியாவின் அல்-நஸர் அணியுடனான ஒப்பந்தத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கையெழுத்திட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

போர்ச்சுக்கல் நாட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து வெளியேறியதைத்தொடர்ந்து, எந்த அணியிலும் இணையாமல் இருந்தார்.

இந்நிலையில் சவூதியின் கிளப் அணியான அல்-நஸர் அணியுடனான ஒப்பந்தத்தில் ரொனால்டோ கையெழுத்திட்டுள்ளதாக, சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, ரொனால்டோ ஆண்டுக்கு 175 மில்லியன் பவுண்ட் பெறுவார். ஏழு ஆண்டுகள் அந்த அணியில் விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments