எங்களை துன்புறுத்தாதீங்க ப்ளீஸ்... மிடுக்கான உடைகளில் அணிவகுத்த செல்லப்பிராணிகள்..!

0 1086

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் செல்லப்பிராணிகள் மீதான துன்புறுத்தலை கைவிடக்கோரி விதவிதமான ஆடைகள் அணிந்த நாய்களுடன், அதன் உரிமையாளர்களும் பேரணியாக அணிவகுத்துச்சென்றனர்.

கிறிஸ்துமஸ் - புத்தாண்டு இடையேயான நாட்களில் ஆண்டுதோறும் விலங்குகள் நல உரிமை காப்பகத்தால் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்படும்.

ஸ்பெயினில் கடந்தாண்டு மட்டும் ஒரு லட்சத்து 67 ஆயிரம் நாய்கள் கைவிடப்பட்டு வீதியில் அனாதையாக சுற்றித்திரிந்ததாகவும், ஏராளமான நாய்கள் வேட்டையாடப்பட்டதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments