ரூ.10 ஆயிரம் லஞ்சம் - கையும் களவுமாக சிக்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்..!

0 1182

தஞ்சாவூர் அருகே, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

குடும்ப பிரச்சனை காரணமாக, தனது 4 மகன்களும் அடித்ததாக மூதாட்டி ஒருவர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனை பெற்றுக்கொண்ட எஸ்.எஸ்.ஐ. மகேந்திரன், மூதாட்டின் 4வது மகன் வெள்ளச்சாமியை அழைத்து, உண்மைக்கு புறம்பான வழக்கு என முடித்துவைப்பதாக கூறி பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, வெள்ளைச்சாமி அளித்த புகாரின்பேரில், ரசாயனம் தடவிய பணத்தைக் கொடுத்து அனுப்பிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அந்த பணத்தை பெறும்போது, மகேந்திரனை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments