இதுவரை இல்லாத அளவிற்கு உக்ரைனை ஏவுகணைகளால் துளைத்தெடுத்த ரஷ்யா..!

0 1611

கீவ் உள்பட பல உக்ரைன் நகரங்களில், இதுவரை இல்லாத அளவிற்கு, மிகப்பெரிய தாக்குதலை ரஷ்யா நடத்திய நிலையில், அத்தாக்குதலை உக்ரைன் ராணுவம் முறியடித்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

நேற்று ஒரே நாளில், 85 ஏவுகணைகள் மூலமும், 63 முறை பல ராக்கெட் அமைப்புகள் மூலமும், 35 முறை வான்வெளியாகவும் ரஷ்யா தாக்குதல் நடத்தியாதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து சுமார் 120 ஏவுகணைகள் மூலம் ரஷ்யா நடத்திய தாக்குதலில், 18-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டடங்களும், 10 முக்கிய உள்கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ரஷ்யா ஏவிய 69 ஏவுகணைகளில் 54 ஏவுகணைகளையும், 16 டிரோன்களில், 11 டிரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments