விசைப்படகுகளில் ட்ரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டத்தை, தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1246

அவசரக் காலங்களில் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் தகவல்களை பரிமாறிக் கொள்ள ஏதுவாக, விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இஸ்ரோ உருவாக்கியுள்ள இந்த டிரான்ஸ்பாண்டர்கள் மூலம், நிலப்பரப்பில் இருந்து இருவழி செய்தி பரிமாற்றம் மேற்கொள்ள இயலும். இக்கருவியை படகில் பொருத்தி, புளூடூத் வாயிலாக இணைத்து அலைபேசி செயலி வழியாக தகவல்களை பெறலாம்.

இதன் மூலம் புயல், சூறாவளி போன்ற அவசர காலங்களில் மீனவர்கள், படகு உரிமையாளர்களுக்கும் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசர செய்தி அனுப்ப இயலும் என்றும், ஆபத்து காலங்களில் ஆழ்கடலில் படகு நிலை கொண்டுள்ள இடத்தை துல்லியமாக கண்டறிந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments