மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைக்க உள்ளதாக தகவல்

0 1966

மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக மோடி நேரில் சென்று துவக்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது தாயார் திடீர் மறைவை ஒட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரி பகுதிகளை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, கொல்கத்தா மெட்ரோவின் ஜோகா-தராட்டலா வழித்தட சேவை மற்றும்  ரயில்வே துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 4 திட்டப்பணிகள் இன்று துவங்கி வைக்கப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments