14 நாட்களில் உலகளவில் ஒரு பில்லியன் டாலர் வசூலை குவித்த அவதார் 2

0 9661

''அவதார் - தி வே ஆஃப் வாட்டர்'' (Avatar - The Way Of Water) திரைப்படம் வெளியான இரண்டே வாரங்களில் உலகளவில் ஒரு பில்லியன் டாலர் வசூலை குவித்துள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'அவதார்' திரைப்படத்தின், 2-ஆம் பாகம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் டிசம்பர் 16ந் தேதி வெளியானது.

அவதார்-2 திரைப்படம் வெளியான 14 நாட்களில் 8200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்து, டாம் க்ரூஸின் "டாப் கன்: மேவரிக்" சாதனையை முறியடித்துள்ளது. வருகின்ற நாட்களில் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதற்கு முன்னதாக "ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்" வெளியான 12 நாட்களில் உலகளவில் ஒரு பில்லியன் டாலர் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments