பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் தமது 100வது வயதில் அகமதாபாதில் இன்று அதிகாலை காலமானார்.
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் நலம் அறிந்தார். மருத்துவ சிகிச்சையால் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்.
ஆனால் இன்று தமது தாயார் காலமானதாக பிரதமர் மோடி தமது டிவிட்டர் பக்கத்தில் உணர்ச்சிப் பூர்வமான செய்திக்குறிப்புடன் அறிவித்துள்ளார்.இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி அகமதாபாத் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments