கம்போடியாவில் சூதாட்ட விடுதியில் நேரிட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழப்பு..!

0 1001
கம்போடியாவில் சூதாட்ட விடுதியில் நேரிட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழப்பு..!

கம்போடியாவின் பாய்பட் நகரிலுள்ள சூதாட்ட விடுதியில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

கிராண்ட் டயமண்ட் சிட்டி உணவகம் மற்றும் சூதாட்ட விடுதியில், நள்ளிரவில் திடீர் தீ விபத்து நேரிட்ட நிலையில், தீயை அணைக்கும் பணியில், 11 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டன.

சுமார் 300 போலீசார், மீட்புப்பணியில் ஈடுபட்ட நிலையில், காயமடைந்த 70 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், பலர் காணாமல் போயுள்ள நிலையில், இரவு நேரமென்பதால், பாதுகாப்பு கருதி மீட்புப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments