கம்போடியாவில் சூதாட்ட விடுதியில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பலி: 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

கம்போடியாவின் பாய்பட் நகரில் உள்ள சூதாட்ட விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததோடு, 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கிராண்ட் டயமண்ட் சிட்டி என்ற அந்த சூதாட்ட விடுதியில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து நேர்ந்த போது, விடுதியில் 400க்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும் பெரும்பாலானோர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தை சுதாரித்துக் கொண்ட சிலர் ஜன்னல் வழியாக வெளியேறி உயிர் தப்பிய நிலையில், ஹெலிகாப்டர்கள் மூலமாக மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
Comments