குறைந்த விலையில் வீடு கட்டித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது..!

கோவையில், குறைந்த செலவில் வீடு கட்டித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
வெள்ளலூர் பகுதியை சேர்ந்த (ஆஷா) பெண் ஒருவர், மாவட்ட குற்றப்பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், தாராபுரத்தைச் சேர்ந்த உதயகுமார் என்பவர், குறிப்பிட்ட தொகையை முன்பணமாக பெற்றுக் கொண்டு வீட்டின் முதற்கட்ட வேலைகளை மட்டும் செய்துவிட்டு, கட்டிமுடிக்காமல் இழுத்தடித்து வந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்ததில் பொள்ளாச்சி, கோமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடு கட்டித் தருவதாக கூறி உதயகுமார், 40 லட்ச ரூபாய் வரை பணமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
Comments