5 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்..!

சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூரில் மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்துள்ளதால் அங்கிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு, விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனையை அடுத்த வாரம் முதல் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 6 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பரிசோதித்ததில் இதுவரை 39 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா இன்று டெல்லி விமான நிலையத்திற்கு சென்று வெளிநாட்டவரைப் பரிசோதிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
Comments