''சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை முதலில் எதிர்த்த திமுகவினர் தற்போது ஆதரவு'' - எடப்பாடி பழனிசாமி பேச்சு!

0 1653

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை அதிமுக கொண்டுவந்தபோது எதிர்த்த திமுகவினர் தற்போது, வேண்டும், வேண்டும் என்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் சூரமங்கலத்தில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து, திருவண்ணாமலையில் எ.வ.வேலு போராட்டம் நடத்தியதாக கூறினார்.

அத்திட்டத்திற்காக விவசாயிகள் பாதிக்காதபடி நிலம் எடுக்கப்பட்டதாகவும், நிலத்திற்கு 4 மடங்கு அதிக விலை தரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், அதிமுக கொண்டு வந்த திட்டங்களை, தற்போதுள்ள அரசு கிடப்பில் போட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments