புதுச்சேரி அதிமுக சார்பில் மாநில அந்தஸ்து கோரி முழு அடைப்பு போராட்டம்..!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
தமிழக மற்றும் புதுச்சேரி அரசு பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்படுகிறது. அசம்பாவிதங்களை தடுக்க, போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முதலியார்பேட்டை அருகே, கடலூர் நோக்கி வந்த தமிழக அரசு பேருந்தின் கண்ணாடிகளை அதிமுகவினர் அடித்து நொறுக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதே போல, பல்வேறு பகுதிகளில் பயணிகள் ஆட்டோக்கள், டெம்போக்களின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், புதுச்சேரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments