உருமாறிய BF-7 கொரோனா வேகமாக பரவக் கூடியது என எச்சரிக்கை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1777

மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை சைதாப்பேட்டை 168வது வார்டில் சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்து இறந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து நான்கு லட்சம் ரூபாயை அமைச்சர் மா.சுப்ரமணியன் வழங்கினார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

BF-7 உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை உடையது என்பதால், புத்தாண்டு கொண்டாட்டங்கள், தியேட்டர்கள், திருமண நிகழ்வு, திருவிழாக்கள் போன்றவற்றில், மாஸ்க் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றார்.

தமிழக சுகாதாரத்துறை ஐசியு-வில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் விமர்சனத்திற்கு பதில் அளித்த அமைச்சர், அவர்தான் தற்போது ஐசியூவில் இருந்து மீண்டுள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments