ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்... விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்..!

0 1696

தமிழகம் முழுவதும் பல்வேறு சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அப்போது வேத மந்திரங்கள் முழங்க மேளதாளத்துடன் கொடிமரத்தில் கொடியேற்றி வைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது .

நெல்லை நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் தமிழகத்தின் பல்வேறு சிவன் கோயில்களிலும் ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments