டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 100 விமானங்கள் கால தாமதம்..!

டெல்லியில் அடந்த பனிமூட்டம் காரணமாக 100 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதுடன், 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் நிலவிய அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக இரவு 11.45 மணிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானமும், அதிகாலை 2.15 மணிக்கு இண்டிகோ விமானமும் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டன.
இதுபோல நடப்பு சீசனில் பனிமூட்டம் காரணமாக விமானம் திருப்பிவிடப்பட்டது இதுவே முதல் முறை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments