வீடு கட்டித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி.. ரியல் எஸ்டேட் நிறுவன நிர்வாகிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை..!

0 1561

கோவையில் வீடு கட்டி தருவதாக கூறி 65 பேரிடம் 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், ரியல் எஸ்டேட் நிறுவன நிர்வாகிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பேரூர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி அளித்த புகாரில்,   ரியல் எஸ்டேட் நிர்வாகி ஜெகதீஸ்வரன், 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயைப் பெற்று மோசடி செய்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், ஜெகதீஸ்வரன், விஜயகுமார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். 

 வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  ஜெகதீஸ்வரனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 3 கோடியே 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. எஞ்சியோரை விடுவித்து ஆணையிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments