மக்களவைத் தேர்தலில் தமிழக பாஜகவை சேர்ந்த 25 பேர் எம்பிக்களாக வெற்றி பெறுவர்-அண்ணாமலை..!

திமுக அரசின் ஆட்சியில் கொங்கு பகுதி புறக்கணிக்கப்பட்டு வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டம் காரமடை தென் திருப்பதி அருகே பாஜக சார்பில் கோவை, நீலகிரி மக்களவைத் தொகுதிக்கான பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, மக்களவைத் தேர்தலில் தமிழக பா.ஜ.க.வில் இருந்து 25 பேருக்கும் மேல் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வார்கள் என்றும், அவர்களில் முக்கியமானவர்களை பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களாக்கி அனுப்பி வைப்பார் என்றும் கூறினார்.
Comments