சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட கொடிய விஷத்தன்மை உடைய பாம்புகள் உட்பட 66 வன உயிரினங்கள் பறிமுதல்..!

0 7372

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில்  கடத்தி வரப்பட்ட கொடிய விஷத்தன்மை உடைய பாம்புகள் உட்பட 66 வன உயிரினங்களை பறிமுதல் செய்து, அவற்றை கடத்தி வந்த 2 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

பாங்காக்கில் இருந்து சென்னை வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதில் ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பயணிகள், தாய்லாந்து நாட்டு வனப்பகுதியில் காணப்படும் அரியவகை மலைப்பாம்பு குட்டிகள், குரங்கு குட்டிகள், அபூர்வ உயிரினங்களை பிளாஸ்டிக் கூடைகளில் அடைத்து கடத்திக் கொண்டுவந்ததை கண்டுபிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments