அமெரிக்காவில் நிலவும் மோசமான வானிலையால், 2வது நாளாக 3,800 விமானங்கள் ரத்து..!

அமெரிக்காவில் நிலவும் மோசமான வானிலையால், 2வது நாளாக 3,800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பனிப்புயலின் கோரத்தாண்டவத்தால் நியூயார்க் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரமான பஃபலோவில் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பனிக்கட்டிகள் குவிந்து கிடக்கின்றன.
வீடுகள், மரங்கள், வாகனங்கள் என அனைத்தும் வெண்பட்டுப் போர்த்தியது போன்று காட்சியளிக்கின்றன. பனிப்புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 60ஆக உயர்ந்துள்ளது.
Comments