காட்டு யானை தாக்கி படுகாயம் அடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

0 2523

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி படுகாயம் அடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மசினகுடி மாவனல்லா பகுதியைச் சேர்ந்த மாதன் என்பவர், கடையில் பொருள்களை வாங்கிவிட்டு வீடு திரும்பி வரும்போது யானை தாக்கி பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மாதனை தாக்கிய யானை, மாவனல்லா மற்றும் வாழைத்தோட்டம் பகுதியில் சுற்றி வருகிறது.

எனவே அந்த யானையை காட்டுக்குள் மீண்டும் விரட்டியடிக்க வேண்டுமென வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments