நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டு பூஜையறையில் புதைப்பு.. பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி கைது..!
விழுப்புரம் அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்து, வீட்டு பூஜையறையில் புதைத்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி செல்போன் சிக்னல் மூலம் ஓசூரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டான்.
மாரங்கியூரை சேர்ந்த 75 வயதான இந்திராணி, கடந்த மாதம் 19ம் தேதி சிவசங்கர் என்பவரால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, சிவசங்கரின் தாயார் குப்புவை கொலைக்கு உடந்தையாக இருந்ததாக முதலில் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் 6 ஆண்டுகளுக்கு முன் பெற்ற கடனை திருப்பித் தருவதாக கூறி, வீட்டிற்கு அழைத்துவந்து, மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து அடித்துக் கொன்று புதைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Comments