இன்னிக்கு ஒரு பிடி அய்யோ... அம்மா... கொத்தோட கவ்விருச்சே..!
கடைத்தெருவில் சுற்றிய நாய் ஒன்றை காலால் மிதிப்பது போல சைக்கை காட்டிய இளைஞரை நாய் தனது வாயால் ஒரு பிடிபிடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது
தெரு நாய்கள் மிச்சம் மீதியை தின்றுவிட்டு அந்த தெருவுக்கு காவலனாக ஆங்குமிங்குமாக சுற்றி திரிவது வழக்கம் .
அப்படி நடைபாதை சாப்பாட்டு கடை அருகில் பசி யோடு சுற்றிய நாய் ஒன்றை அந்தவழியாக நடந்து சென்ற இளைஞர் தனது காலால் எத்தி மிதிப்பது போல சைகை காட்டினார்.
அந்த நாயோ தனக்கு கடிப்பதற்கு தான் ஏதோ உணவு தருவது போல தந்து ஏமாற்றுகிறார் என்று எண்ணி ஒரு ஜம் பன்னி , வாயால் ஒரு பிடி பிடித்தது
அந்த தாடி பையனின் போதாத காலம், நாய் கொத்தோடு கவ்வியதால் கதறும் நிலைக்கு தள்ளப்பாட்டார்.
அருகில் இருந்தவர்கள் விரட்டியதால் அந்த நாய் அங்கிருந்து ஓடியது.
சும்மா போற நாயாக இருந்தாலும் , நபராக இருந்தாலும் சீண்டினால் சேதாரம் கெவியாக இருக்கும் என்று வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்டு வருகின்றது.
எந்த ஊரில் பதிவான காட்சி என்ற விபரமின்றி இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
Comments