மத்திய அரசுப் பணிகளில் தமிழகத்திற்கு முன்னுரிமை தேவை - பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

0 1184

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்பை உறுதி செய்ய வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

அக்கடிதத்தில், (2021-22ம் ஆண்டில் 4 புள்ளி 5 சதவீத தென் மண்டலத்தினர் மட்டுமே மத்திய அரசின் பணிக்கு தேர்வாகி உள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், தென்மண்டல  ரயில்வே பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இடம் பெறாதது வேலை தேடும் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார். எனவே, )

தமிழ்நாட்டில் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளையும் தமிழில் நடத்தவும், தமிழகத்திலுள்ள பணி இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதோடு, ரயில்வே நிறுவனங்களில் பயிற்சி பெறுவோருக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் நேரடி நியமனங்களில் பிராந்திய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டு கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments