''தமிழ்நாட்டில் நாடாளுமன்றத்தேர்தல் மட்டுமின்றி, சட்டமன்றத்தேர்தலிலும் மாற்றம் நிகழும்'' - ஜெ.பி.நட்டா..!

0 1187

தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி, சட்டப்பேரவை தேர்தலிலும் மாற்றம் நிகழும் என, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

கோவை மேட்டுப்பாளையம் அருகே நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய ஜெ.பி.நட்டா, தமிழ்நாட்டில் பாஜகவின் நம்பிக்கையான முன்னேற்றத்தை பார்த்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

தமிழகம் புதிதாக பெற்ற 11 மருத்துவக் கல்லூரிகள் மூலம் மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்பு வலுவடைந்துள்ளதாகவும், தமிழ் மொழி - கலாச்சாரத்திற்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளிப்பதாகவும் நட்டா கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments