கொரோனா எதிரொலி : கோயம்பேடு சந்தையில் மீண்டும் முகக்கவசம் அணிய ஒலிப்பெருக்கி மூலம் அதிகாரிகள் அறிவுறுத்தல்..!

0 1425
கொரோனா எதிரொலி : கோயம்பேடு சந்தையில் மீண்டும் முகக்கவசம் அணிய ஒலிப்பெருக்கி மூலம் அதிகாரிகள் அறிவுறுத்தல்..!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், வியாபாரிகளும், பொதுமக்களும் சமூக இடைவெளியுடன் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சிஎம்டிஏ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வெளிமாநிலங்களில் இருந்து வரும் காய்கறி வாகனங்கள் சோதனைக்கு  பிறகு அங்காடி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.

முகக்கவசம் அணிய ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தப்படுவதாகவும், முகக்கவசம் அணியாத வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments