முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தான்யாவிடம் முதலமைச்சர் செல்போனில் நலம் விசாரிப்பு..!

0 1888
முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தான்யாவிடம் முதலமைச்சர் செல்போனில் நலம் விசாரிப்பு..!

அரிய வகை முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு மறு அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆவடியை சேர்ந்த சிறுமி தான்யாவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போனில் நலம் விசாரித்தார்.

ஸ்டீபன்ராஜ்-சௌபாக்கியா தம்பதியின் மூத்த மகளான, 9 வயது சிறுமி தானியா, ஆறரை வருடங்களாக முக சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு முக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பக்கத்தில் உள்ள கண் மூடுவதற்கு சிரமமாக உள்ளதாலும், வாய் திறக்க அவதிப்படுவதாலும், அவர் மீண்டும் அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பால்வளத்துறை அமைச்சர் நாசர் தான்யாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments