கஞ்சா போதையில் ஆம்புலன்ஸ் பணியாளரை கத்திரியால் குத்திய போதை ஆசாமி..!

0 1416

மதுரை மேலூர் அருகே முதலுதவி சிகிச்சை அளித்த 108 ஆம்புலன்ஸ் பணியாளரரை கஞ்சா போதையில் இருந்த ஆசாமி கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

பதினெட்டான்குடியில் இருசக்கர வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்து மேலூரில் இருந்துவந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம், காயமடைந்தவர்களை ஏற்றிக் கொண்டு சென்றது.

செல்லும் வழியில், கஞ்சா போதையில் இருந்த ஆரப்பாளையத்தைச் சேர்ந்த முத்துபாரதி, ஆம்புலன்ஸ் பணியாளர் விமல் மீது கத்தரியைக் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில், படுகாயமடைந்த விமல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், கத்திரியால் குத்திய நபரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments