தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட ஐவர் கும்பல் கைது..!

0 2029

சென்னை அயனாவரம், தாம்பரம், மற்றும் குரோம்பேட்டை, பகுதியில் தொடர் சரக்கு வாகனம் திருட்டில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அயனாவரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக நான்கு கார்கள் மற்றும் இரண்டு குட்டி யானை எனப்படும் மினி வேன்கள் திருடு போனது.இதையடுத்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் புளியந்தோப்பு தாமோதரன் என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அயனாவரத்தை சேர்ந்த இன்பராஜ் என்பவருடன் சேர்ந்து கள்ளசாவி தயாரித்து வாகனங்களை திருடியது தெரிய வந்தது.

இவ்வாறு திருடிய கார்களை மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த தனகோபால், புதூரை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் கோவையை சேர்ந்த இமாம் அலி ஆகியோரிடம் விற்று வந்ததும் அம்பலமானது.இதையடுத்து அவர்களிடம் இருந்து 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments