நாகையில் மதுபோதையில் நண்பரை பட்டாக்கத்தியால் வெட்டிக்கொலை செய்த இளைஞர் கைது..!
நாகையில் தாய் மற்றும் சகோதரியை திட்டிய நண்பரை மதுபோதையில் பட்டாக்கத்தியால் வெட்டிக்கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
எரவாஞ்சேரியை சேர்ந்த கிருஷ்ணராஜூம், ஆழியூரை சேர்ந்த நவீனும் நண்பர்களாக இருந்தனர். இருவரும் பூலாங்குடி பேருந்து நிறுத்தம் அருகே மது அருந்தியபடி பேசிக்கொண்டு இருந்தபோது கிருஷ்ணராஜ் நவீனிடம், தான் சபரிமலைக்கு சென்ற நேரத்தில் தனது தாய் மற்றும் சகோதரியிடம் சென்று தவறாக பேசியது குறித்து தட்டிக் கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்து கிருஷ்ணராஜ் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து வெட்டியதில் நவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Comments