தூத்துக்குடியில் மின்கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து.. முக்கிய ஆவணங்கள், பணம் தீயில் எரிந்து நாசம்..!

0 2270
தூத்துக்குடியில் மின்கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து.. முக்கிய ஆவணங்கள், பணம் தீயில் எரிந்து நாசம்..!

தூத்துக்குடியில் மின் கசிவு காரணமாக வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் தீயில் எரிந்து நாசமாயின. 

இந்திரா நகரில் உள்ள வீட்டில் முத்து செல்வி என்பவர் தமது சகோதரி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று காலை முத்துசெல்வி வேலைக்கு சென்றநிலையில், அவரது வீட்டில் இருந்து புகை வருவதாக தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்தின்போது யாரும் வீட்டில் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments