ஆம்னி வேன்- சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து.. சிறுமி உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!

0 6246
ஆம்னி வேன்- சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து.. சிறுமி உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே ஆம்னி வேன் மற்றும் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 4பேர் உயிரிழந்தனர்.

சோழமாதேவியை சேர்ந்த ரசிதா பேகம், பானு, சஷ்மிகா மற்றும் இஸ்மாயில் ஆகிய நால்வரும் உடுமலையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வாடகை ஆம்னி வேனில் ஊர் திரும்பினர்.

கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நரசிங்காபுரம் அருகே முன்னால் சென்ற வாகனத்தை வேன் முந்திச்செல்ல முற்பட்ட போது, எதிரே வந்த சரக்கு வாகனத்தில் மோதியது.

இதில் சிறுமி உள்பட 3 பெண்களும், ஓட்டுனரும் உயிரிழந்தனர். சிறுவன் இஸ்மாயில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments