தலைநகர் டெல்லியில் 4,300-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு..!

0 1735

தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டில் 4 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு உறுதியாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

அக்டோபர் மாதம் 1238 பேருக்கும், நவம்பர் மாதம் 1420 பேருக்கும் டெங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக இந்த மாதம் மட்டும் 700க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு உறுதியாகியுள்ளதாகவும் மாநகராட்சி கூறியுள்ளது.

இதேபோல் டெங்குவுக்கு இதுவரை 7 பேர் பலியாகியிருப்பதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் 258 பேருக்கு மலேரியாவும், 47 பேருக்கு சிக்கன்குனியாவும் உறுதிப்படுத்தப்பட்டதாக டெல்லி மாநகராட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments