சாலையோரம் இருந்த வீட்டின் மீது அரசு பேருந்து மோதி விபத்து..!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அரசுப் பேருந்து ஒன்று சாலை யோரம் இருந்த வீட்டின் மீது மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.
மதுரையிலிருந்து சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்றது. திருப்புவனம் புதூர் வழியாக அந்த பேருந்து சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த வீட்டின் மீது மோதியது.
இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments