குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு தீவிர சோதனை..!

0 1317
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு தீவிர சோதனை..!

கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து சென்னைக்கு வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

மர்ம நபர் ஒருவர் காவல்துறை கட்டுப்பாடு அலுவலகத்தை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதன்பேரில் ரயிலை தாம்பரம் ரயில் நிலைய ஐந்தாவது பிளாட்பாரத்தில் நிறுத்தி, அனைத்து பெட்டிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதனால் ரயிலில் இருந்த பயணிகள், மின்சார ரயில் மூலம் எழும்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments