கஞ்சா போதையில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு.. 11பேர் கொண்ட கஞ்சா கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கஞ்சா போதையில் 3பேரை அரிவாளால் வெட்டிய 11 பேர் கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கீழமணக்குடியை சேர்ந்த ஜெனிஸ் என்கிற ஜான் பிரிட்டோ மற்றும் அவருடைய கூட்டாளிகள் 10 பேர் கஞ்சா போதையில் நேற்று அப்பகுதியில் சிறுவர் சிறுமியர் விளையாடிக் கொண்டிருந்த இடத்தில் இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதை அங்கிருந்த 3 பேர் தட்டிக் கேட்ட போது ஆத்திரம் அடைந்து, மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments