கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்த 2 பேர் கைது..!

0 1041

மதுரையில், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்ததாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரகசிய தகவலின்பேரில் தனிப்படை அமைத்து போலீசார் நடத்திய சோதனையில்,  இருசக்கர வாகனத்தில் வந்த வடகாடுபட்டியை சேர்ந்த தமிழழகன்  பிடிபட்டார். 

விசாரணையில், அண்ணா நகரை சேர்ந்த முரளிராஜிடம் போதை தரும் தூக்க மாத்திரை மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை மொத்தமாக வாங்கி, அதிக லாபத்திற்கு விற்பனை செய்து வந்ததது தெரியவந்தது.

இதன் அடிப்படையில், முரளி ராஜ் தங்கியிருந்த இடத்தில் சோதனை மேற்கொண்ட போலீசார் 17,000-க்கும் மேற்பட்ட காலாவதியான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments