ஆதிதிராவிடர் நலனுக்காக ரூ.4,099 கோடி நிதி ஒதுக்கியும் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தவில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஆதி திராவிடர் நலனுக்காக 4 ஆயிரத்து 99 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், 20 திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தவில்லை என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆதி திராவிட நலத்துறை ஊழியர்களுக்கு 757 கோடி ரூபாயை ஊதியமாக அரசு செலவிட்ட நிலையில், விடுதிக்கு ஏதும் செலவிடாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆதி திராவிடர் விடுதியில் சரியான குடிநீர் கிடைக்காமல் மாணவர்கள் அவதிக்குள்ளாவதாகவும், உணவில் புழுக்கள் நெளிவதாக குற்றஞ்சாட்டுவதாகவும் அண்ணாமலை கூறினார்.
Comments