கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது அலையில் சிக்கி மாயமான நான்கு இளைஞர்களும் சடலமாக கண்டெடுப்பு!
சென்னை எண்ணூர் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது அலையில் சிக்கி மாயமான இளைஞர்கள் 4 பேர், சடலமாக மீட்கப்பட்டனர்.
மணலி புதுநகர் ஆண்டார் குப்பம் அருகே இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கட்டிட தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த 16 இளைஞர்கள் நேற்று எண்ணூர் பாரதியார் நகர் கடற்கரைக்கு சென்றனர்.
இதில் 8 பேர் கடலில் குளித்துக்கொண்டிருந்த நிலையில், 4 பேர் அலையில் சிக்கி மாயமாகினர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இன்று காலை வசீம் என்பவரின் உடல், எண்ணூர் ராமகிருஷ்ணா கடற்கரை அருகே ஒதுங்கிய நிலையில், பிற்பகலில் புர்கான், மூஸ்தகிம் ஆகியோரின் உடல்கள் எண்ணூர் சான்கோ அருகேயுள்ள கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. திருவெற்றியூர் கே.வி.கே.குப்பம் கடற்கரையில் இப்ராஹிம் என்பவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
Comments