வெற்றியின் உச்சங்களை இந்தியா அடைய, கடந்த கால குறுகிய கண்ணோட்டத்தில் இருந்து நாம் விடுபட வேண்டும் - பிரதமர் மோடி!

0 1158

வெற்றியின் உச்சங்களை இந்தியா அடைய, கடந்த கால குறுகிய கண்ணோட்டத்தில் இருந்து நாம் விடுபட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சீக்கிய குரு கோவிந்த் சிங் மற்றும் அவரது மகன்களின் நினைவாக இன்று வீர் பால் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லி மேஜர் தயான் சந்த் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்றார். பின்னர் பேசிய பிரதமர்,பின் பயங்கரவாதத்திற்கு எதிராக குரு கோபிந்த் மலைபோல் நின்றதாக கூறினார்.

மேலும், நாட்டின் வரலாறு நம்பிக்கையால் நிரம்பியிருக்க வேண்டும் என்றும், துரதிர்ஷ்டவசமாக வரலாறு என்ற பெயரில், தாழ்வு மனப்பான்மைக்கு வழிவகுக்கும் கதைகள் மட்டும் கற்பிக்கப்படுவதாகவும் பிரதமர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments