ஏ.டி.எம் மெஷினை சுத்தியலால் உடைத்து பணத்தை திருட முயன்ற கொள்ளையன் கைது!

0 1375

காரைக்காலில் ஏ.டி.எம் மெஷினை சுத்தியலைக் கொண்டு உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாரதியார் சாலையில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம் மெஷினை உடைக்க முயன்ற மர்ம நபர், அதனை உடைக்க முடியாததால் ஆத்திரமடைந்து சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவற்றை அடித்து உடைத்துவிட்டு தப்பினான்.

வங்கி அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் கொள்ளையனை தேடி வந்த போலீசார், பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபரை பிடித்தனர்.

அவன் அணிந்திருந்த உடையை வைத்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதை உறுதிப்படுத்திய போலீசார் அவனை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments