பிலிப்பைன்ஸில் வெள்ள பாதிப்பு - சுமார் 40,000 பேர் வெளியேற்றம்.. 6 பேர் உயிரிழப்பு..!

பிலிப்பைன்ஸில் வெள்ள பாதிப்பால் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று பிலிப்பைன்ஸின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் மிண்டானோ, ஒசாமிஸ், கிளாரின் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.
சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள பாதிப்புகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததாகவும், 10க்கும் மேற்பட்டோர் மாயமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments