வீடு புகுந்து சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி முகமூடி கும்பல் கொள்ளை..!
வேடசந்தூர் அருகே, வீடு புகுந்து சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 43 சவரன் நகை, 18 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சீனிவாசன், தனது மனைவி கலையரசி மற்றும் இரு பிள்ளைகளுடன் சாலையூரில் வசித்து வருகிறார்.
நேற்றிரவு சீனிவாசன் வெளியே சென்றிருந்த நிலையில், வீடு புகுந்த 5 பேர் கொண்ட கும்பல், சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, கலையரசியின் கைகளை கட்டிப் போட்டு, 5 பீரோக்களையும் உடைத்து பணம், நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியதாக கூறப்படுகிறது.
அவர்கள் யாருக்கும் தகவல் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக வீட்டிலிருந்த செல்போன்களை அக்கும்பல் பறித்துச் சென்றதாக கூறப்படும் நிலையில், சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments