காட்டு யானை தாக்கியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழப்பு..!

0 1611

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தார். 

கடம்பூர் மலை பகுதி ஏலஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் குன்றி மலை கிராமத்திற்கு சென்றார். 

அஞ்சனை பிரிவு அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் மாமரத்து பள்ளம் பிரிவு அருகே சென்றபோது புதர் மறைவில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை திடீரென சாலைக்கு வந்தது.

இதனால் திகைத்துப் போன பழனிசாமி வாகனத்தை  நிறுத்திய போது அந்த யானை துரத்தி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த நபர் வேகமாக ஓடி நூலிழை உயிர் தப்பினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments