அமெரிக்க விமானநிலையத்தில் விமானத்தில் திடீர் தீ.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..!

அமெரிக்காவின் நியூயார்க் விமானநிலையத்தில் தரை இறங்கிய விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 167 பயணிகள்உயிர் தப்பினர்.
Barbados இல் இருந்து வந்த ஜெட்ப்ளூ விமானம் நியூயார்க்கில் உள்ள ஜான் எப் கென்னடி சர்வதேச விமானநிலையத்தில் தரை இறங்கியது.
அப்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவரின் லேப்டாப்பில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது.
இதனை அடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் 7பேர் காயம் அடைந்தாலும் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.
Comments