இளைஞர்களிடம் கத்தி முனையில் பணம், நகை பறிப்பு.. தனியார் பேருந்து நடத்துனர் கைது..!

புதுச்சேரியில், இளைஞர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றதாக தனியார் பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்டார்.
புளியரம்பாக்கத்தைச் சேர்ந்த 2 பேர் கட்டுமானப் பொருட்கள் வாங்குவதற்காக புதுச்சேரி சென்றுள்ளனர்.
பேருந்து நிலையம் எதிரில் உள்ள மேம்பாலத்தில் அவர்கள் நடந்து சென்ற போது, இளைஞர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி 9 ஆயிரம் ரூபாய் ரொக்கம், செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
புகாரின் பேரில் தனியார் பேருந்து நடத்துனரான விக்னேஷ்வரனை போலீசார் கைது செய்தனர்.
Comments