ஸ்பெயினில் 65 அடி உயர பாலத்திலிருந்து ஆற்றுக்குள் பேருந்து விழுந்து விபத்து.. 6 பேர் பலி!

0 1183

ஸ்பெயினில் சுமார் 130 அடி உயர பாலத்தில் இருந்து பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு விகோ நகரம் நோக்கி 8 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

மழை பெய்ததன் காரணமாக பேருந்தின் டயர்கள் வழுக்கியதில் இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. இதில் ஓட்டுநரும் ஒரு பெண் பயணியும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

நேற்றிரவே 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. ஆற்றில் நீரில் வேகம் அதிகரித்திருந்ததால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், காலையில் மேலும் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments