ஜம்மு - காஷ்மீரில் குவியல் குவியலாக ஆயுதங்களை பறிமுதல் செய்த இந்திய ராணுவத்தினர்..!

0 1209

ஜம்மு - காஷ்மீரின் உரி பகுதியில் சோதனை நடத்திய இந்திய ராணுவத்தினர், 8 AKS 74 ரக துப்பாக்கிகள், 12 சீன துப்பாக்கிகள் உள்பட குவியல் குவியலாக ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

பாகிஸ்தானில் இருந்த வந்த போதை கடத்தல் பொருட்கள் குறித்து கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து, குப்வாரா மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில், இந்திய ராணுவத்தினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, 8 AKS 74 ரக துப்பாக்கிகள், 12 சீன கைத்துப்பாக்கிகள், 14 சீன மற்றும் பாகிஸ்தான் கையெறி குண்டுகள் மற்றும் பாகிஸ்தான் கொடி பொறிக்கப்பட்ட 81 பலூன்கள் மற்றும் ஏராளமான துப்பாக்கி தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். 5 காவலர்கள், ஒப்பந்ததாரர் உள்பட 17 பேர் கைது செய்யப்ட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments