பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வியாபாரி..!

0 1790

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மொச்சைக்காய் வியாபாரி, மூதாட்டியை தாக்கி செயின் பறிப்பில் ஈடுபட்ட காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பழனியாண்டவர் காலனியில் உள்ள வசந்தாதேவி என்ற மூதாட்டி, வியாபாரி தங்கரத்தினத்திடம் மொச்சைக்காய் வாங்கிவிட்டு, பணம் எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்றுள்ளார்.

பின்னாலேயே வந்த வியாபாரி, மூதாட்டியை தாக்கி செயின் பறிக்க முயன்றுள்ளான். செயினை பறிகொடுக்காமல் போராடிய மூதாட்டியின் சத்தத்தை கேட்டு வந்த இரண்டு பேர் கதவை திறந்தபோது, நடந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து வீட்டின் வெளிப்பக்கமாக கதவை பூட்டினர்.

மேலும் சிலரை அழைத்து வந்து வியாபாரியை பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது அவன் காயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments